ADVERTISEMENT

விருப்பமனு வாங்க தயரான விசிக... நேர்காணலை துவங்கிய காங்கிரஸ்!

08:48 AM Mar 06, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திமுக - விசிக இடையே நடைபெற்ற தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தையில், விசிகவிற்கு 6 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது. முன்னதாக 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், திமுக - விசிக கூட்டணியில், விசிகவிற்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டன. சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமாரும் நின்று வெற்றிபெற்றனர். அதேபோல், அதனைத் தொடர்ந்து நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக - விசிக கூட்டணி தொடர்ந்தது. வரும் தேர்தலில் விசிகவிற்கு அதிக இடங்கள் ஒதுக்கப்படும், குறிப்பாக இரட்டை இலக்கத்தில் தொகுதிகளைப் பெறுவோம் என அக்கட்சி நிர்வாகிகள் எதிர்பார்த்திருந்த நிலையில், 6 இடங்களே ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், தனிச் சின்னத்தில் விசிக போட்டியிட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று (06.03.2021) காலை முதல் வரும் மார்ச் 8-ஆம் தேதி 5 மணி வரை சட்டப்பேரவை தேர்தலில் விசிக சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்கலாம் என விசிக தலைமை அறிவித்துள்ளது. விருப்பமனு வழங்குவதற்கான நிர்வாகிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் நேரடியாக 2000 ரூபாய் செலுத்தி விருப்ப மனுக்களைப் பெற்றுக்கொள்ளலாம் என விசிக தலைமை அலுவலகம் தெரிவித்திருக்கிறது. அதன்பிறகு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவதற்கான நேர்காணல் துவங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் காங்கிரஸ் சார்பில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு இன்று துவங்கி நாளை வரை நேர்காணல் நடக்க இருக்கிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT