Advertisment

பாஜக கூட்டணியில் இடம்பெற மாட்டோம்: தமிமுன் அன்சாரி

2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக இடையே கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள மஜக தங்களது கட்சியின் அரசியல் நிலைப்டு குறித்து வரும் 28ஆம் தேதி முடிவு எடுத்து அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Advertisment

thamimun ansari

இதுதொடர்பாக மஜக பொதுச்செயலாளரும், நாகை எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

Advertisment

வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் அமையும் கூட்டணியில் நாங்கள் இடம் பெறமாட்டோம் என்ற நிலைபாட்டில் உறுதியாக இருக்கிறோம்.சமூக நீதி, சமூக நல்லிணக்கம், சமத்துவ ஜனநாயகம் என்பது எமது கொள்கையாகும்.

தமிழகத்தின் வாழ்வாதாரங்கள், தமிழர் உரிமைகள், பின்தங்கிய சமூகங்களின் நலன்கள் ஆகியவற்றை முன்வைத்தே எமது அரசியல் தொடரும்.

மனிதநேய ஜனநாயக கட்சியின் அடுத்தக் கட்ட அரசியல் நிலைபாடு, குறித்து எதிர்வரும் பிப்ரவரி 28 அன்று சென்னையில் கூடும் தலைமை நிர்வாக குழுவில் முடிவெடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு கூறியுள்ளார்.

Alliance mjk THAMIMUN ANSARI
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe