Edappadi supporters celebrate

Advertisment

முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டது செல்லும் என ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு நகர அதிமுக சார்பில் நகர செயலாளர் பீர்முகமது தலைமையில் அக்கட்சியினர் பேருந்து நிலையம் முன்பு திரண்டு, ‘எடப்பாடி பழனிச்சாமி வாழ்க’ என்ற கோஷங்களை எழுப்பியும், பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.அதுபோல் முன்னாள் அமைச்சரான நத்தம் விஸ்வநாதன் தொகுதியில் உள்ள நத்தம், கோபால்பட்டி உள்பட சில பகுதிகளில் எடப்பாடி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், நிலக்கோட்டை உள்பட சில பகுதிகளில் எடப்பாடி ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.