முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை காலை வெளிநாட்டு பயணம் மேற்கொள்கிறார் என்று அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளிவந்தது. அதில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு செல்கிறார் என்று தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் செப்டம்பர் 12 ஆம் தேதி வரை வெளிநாட்டு பயணம் மேற்கொள்கிறார். இதனால் அவர் செல்லும் 14 நாட்களுக்கு தமிழக முதல்வர் பொறுப்பை யார் கவனிப்பார் என்று பெரிய கேள்வி எழுந்தது. ஆனால் முதல்வர் தரப்பில் இருந்து பொறுப்பை யாருகிட்டயும் கொடுக்கவில்லை என்று அறிவித்தனர். முதல்வர் பொறுப்பை யார் கவனிக்க போகிறார் என்று அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisment

admk

தமிழக அரசு சார்பாக எப்போதும் முக்கிய முடிவுகளை முதல்வர் தான் எடுப்பார். அவரது துறை சார்ந்த எல்லா முடிவுகளும் அவரே எடுப்பார் என்றும் கூறினார். மேலும் தமிழக அரசின் தலைமை நிர்வாக பொறுப்பை வெளிநாடு சென்றாலும் முதல்வர் எடப்பாடியே கவனிப்பார் என்றும் கூறியுள்ளார். இதனால் முதல்வர் பொறுப்பு எந்த அமைச்சருக்கும் கொடுக்கவில்லை என்று கூறினார். இதற்கு முன்பே முதல்வர்கள் வெளிநாடு பயணம் செய்த போதும் இப்படித்தான் நடைமுறை கடைபிடிக்கப்பட்டு உள்ளது, என்று அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார். இதனால் அதிமுகவில் இருந்த குழப்பம் நீங்கியதாக சொல்லப்படுகிறது. எடப்பாடியின் இந்த முடிவால் ஓபிஎஸ் தரப்பு கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறுகின்றனர்.