Edappadi Palaniswami says Divination works

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மறைந்த கும்மிடிப்பூண்டி கி.வேணுவின் பேரனும், திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் உமா மகேஸ்வரியின் மகனுமான கோ. ஸ்டாலின் - யுவஸ்ரீ ஆகியோரது திருமணம் நேற்று முன்தினம் (23.10.2024) நடைபெற்றது. இந்த திருமணத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.

Advertisment

இந்நிகழ்வில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “எடப்பாடி பழனிசாமி ஏதோ கனவு கண்டிருக்கிறார். அதற்காக ஜோசியம் எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனால், ஒன்றை மட்டும் நான் உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன். திமுகவைப் பொறுத்தவரைக்கும், கூட்டணி என்று சொன்னால், அது கொள்கை கூட்டணியாக மட்டுமல்ல, மக்கள் கூட்டணியாக இன்றைக்கு இருந்து கொண்டிருக்கிறது. கனவு காணவேண்டாம். உறுதியாகச் சொல்கிறேன். 2026இல் மட்டுமல்ல, அதைத் தொடர்ந்து வரக்கூடிய எந்தத் தேர்தலாக இருந்தாலும் திமுக தான் வெற்றி பெறும் என்பதில் யாருக்கும் எந்தவித சந்தேகம் இருக்க வேண்டியதில்லை” எனப் பேசியிருந்தார்.

Advertisment

Edappadi Palaniswami says Divination works

இந்நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடியில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “ முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி எப்போது ஜோசியராக மாறினார் என்று கேட்கிறார். ஜோசியம் பலிக்கும். 2026இல் அதிமுக ஆட்சிக்கு வரும். முதல்வர் மு.க. ஸ்டாலின் சொன்னபடியே ஜோசியம் பலிக்கும். கவலைப்படாதீர்கள். ஏனென்றால் அதிமுக ஆட்சிக்காலத்தில் ஏராளமான திட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளோம்” எனப் பேசினார்.