Advertisment

ஆளுநருடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு; முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆலோசனை

Edappadi Palaniswami meeting with Governor; Advice on key issues

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான பிரச்சனை காரணமாக ஓபிஎஸ் அணி, எடப்பாடி அணி எனப் பிரிந்து கிடக்கும் சூழலில் எடப்பாடி அணி தமிழக எதிர்க்கட்சி துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை நியமித்திருந்தது. அதேபோல், ஓபிஎஸ் சார்பில் மாவட்டச் செயலாளர்களும், எடப்பாடி சார்பில் மாவட்டச் செயலாளர்களும் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றனர்.

Advertisment

அண்மையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், "அதிமுகபொதுக்குழுக் கூட்டம் விரைவில் நடத்தப்படும். புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டமும் விரைவில் நடைபெறும். வாய்ப்பு கிடைத்தால் டி.டி.வி. தினகரனைசந்திப்பேன்" எனத் தெரிவித்திருந்தார்.

Advertisment

இந்நிலையில், இன்று சென்னை ராஜ்பவனில் அதிமுக நிர்வாகிகளுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை, மழை வெள்ளப் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளைக் குறித்து ஆலோசிக்க இருக்கலாம் எனத்தகவல் வெளியாகியுள்ளது.

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் பதவி தொடர்பாகவும், கோவை கார் வெடிப்பு முதலியவை குறித்தும் விவாதிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe