Skip to main content

ஆளுநருடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு; முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆலோசனை

Published on 23/11/2022 | Edited on 23/11/2022

 

Edappadi Palaniswami meeting with Governor; Advice on key issues

 

 

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான பிரச்சனை காரணமாக ஓபிஎஸ் அணி, எடப்பாடி அணி எனப் பிரிந்து கிடக்கும் சூழலில் எடப்பாடி அணி தமிழக எதிர்க்கட்சி துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை நியமித்திருந்தது. அதேபோல், ஓபிஎஸ் சார்பில் மாவட்டச் செயலாளர்களும், எடப்பாடி சார்பில் மாவட்டச் செயலாளர்களும் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றனர்.

 

அண்மையில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், "அதிமுக பொதுக்குழுக் கூட்டம் விரைவில் நடத்தப்படும். புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டமும் விரைவில் நடைபெறும். வாய்ப்பு கிடைத்தால் டி.டி.வி. தினகரனை சந்திப்பேன்" எனத் தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில், இன்று சென்னை ராஜ்பவனில் அதிமுக நிர்வாகிகளுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை, மழை வெள்ளப் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சனைகளைக் குறித்து ஆலோசிக்க இருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

 

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் பதவி தொடர்பாகவும், கோவை கார் வெடிப்பு முதலியவை குறித்தும் விவாதிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

குழப்பத்தில் சிக்கிய அதிமுக தேர்தல் அறிக்கை!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 AIADMK election report in confusion

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி தொகுதிப் பங்கீட்டை முடித்த கையோடு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதோடு தேர்தல் அறிக்கையும் வெளியிட்டது. திமுக இரண்டு தினங்களுக்கு முன்பு தேர்தல் அறிக்கை கொடுத்திருந்த நிலையில் அதிமுக நேற்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருந்தது.

அறிக்கையில் சிறப்பு அம்சங்களாக ஆளுநர் பதவி நியமனத்திற்கு கருத்து கேட்க வேண்டும்; நீட் தேர்வுக்கு மாற்றாக மாற்றுத் தேர்வு முறை கொண்டு கொண்டு வரப்படும்; பெண்களுக்கு மாதம் 3000 ரூபாய் உரிமை தொகை; சென்னையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தை நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்; முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்; புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும்; சமையல் எரிவாயு விலை கட்டுப்படுத்தப்படும்; சீம கருவேல மரங்கள் அகற்றும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்; தமிழகத்தில் புதிய நகரங்களில் மெட்ரோ திட்டங்கள் கொண்டுவரப்படும் என்பவை இடம்பெற்றுள்ளது.

இதில் மகளிர் உரிமைத் தொகை 3000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு திமுகவை பின் தொடர்ந்து கொடுக்கப்பட்ட அறிவிப்பா? என எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், 'இதில் கொடுத்துள்ள அனைத்து வாக்குறுதிகளும் மத்திய அரசிடம் மாநில அரசு வலியுறுத்தி பெற இருப்பது. மத்திய அரசும் மாதம் தோறும் மகளிருக்கு உரிமை தொகை  வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துவோம்' எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியா கூட்டணியில் உள்ள திமுக உள்ளிட்ட கட்சிகள் ஒருவரை பிரதமராக முன்னிறுத்தும் பட்சத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மோடியையே மீண்டும் பிரதமர் முகமாக கொண்டு வர இருக்கிறது. இந்தநிலையில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் மகளிர் உரிமைத் தொகை 3000 ரூபாய் மத்திய அரசிடம் இருந்து வலியுறுத்தி பெற்றுத் தருவோம் மற்றும் சென்னையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை நடத்துவோம் உள்ளிட்ட வாக்குறுதிகள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்கு பின் பாஜகவை அதிமுக ஆதரிக்குமா அல்லது இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் உருவாகும் மத்திய அரசிடம் வலியுறுத்துமா? என அரசியல் வியூகர்களாலும், சமூக வலைதளங்களிலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

Next Story

'ஒரு இடத்தில்கூட எடப்பாடி வெற்றி பெற முடியாது'- ஓபிஎஸ் பேட்டி

Published on 28/01/2024 | Edited on 28/01/2024
'Edappadi cannot win even in one place' - OPS interview

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று திண்டுக்கல்லில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். வேடசந்தூர் முன்னாள் ஒன்றிய செயலாளர், மாவட்டச் செயலாளருமான சுப்பிரமணி முன்னிலை வைத்தார்.

கூட்டத்திற்கு பின் செய்தியாளர்கள் மத்தியில் ஓபிஎஸ் பேசுகையில், 'நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி அணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது. தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைக்கப்பட்ட குழு எந்த குழுவாக இருந்தாலும் அந்த குழு டம்மி குழு. அவர்கள் எந்த தேர்தலிலும் வெற்றி பெற முடியாது.  இந்தியா கூட்டணி  ஆண்டிகளின் மடம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கூட்டணியில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறி வருகின்றனர். கடந்த பத்தாண்டு காலம் இந்தியாவை மிக வலிமையோடு பிரதமர் மோடி வழி நடத்தி வருகிறார். இந்தியாவை வலிமையாக உருவாக்க அத்தனை நிலைகளிலிருந்தும் பாடு பட்டுக் கொண்டிருக்கிறார் .

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய நாட்டை யார் ஆள வேண்டும் முடிவை எடுக்க வேண்டிய சூழ்நிலை.  இந்த தேர்தலில் பத்தாண்டு காலமாக சிறப்பாக ஆட்சி செய்த பிரதமராக வரவேண்டும் என்ற நல்ல கருத்து இந்தியா முழுவதும் வலுப் பெற்று இருக்கிறது ஆகவே பாஜக தலைமையிலான கூட்டணி தான் வெற்றி பெறும். இந்தியா கூட்டணி இந்தியாவை ஆள முடியாது. ஒருங்கிணைக்க கூடிய சக்தி அவர்களிடம் இல்லை. அது நிரூபிக்கப்பட்டுள்ளது. . எங்களுடன் யார் கூட்டணி என்பதை பொறுத்திருந்து பாருங்கள். எங்கள் கூட்டணியின் தலைமை  பாஜக தான் அந்தக் கூட்டணியில் நாங்கள் இருக்கிறோம். இன்னும் நிறைய கட்சிகள் அந்த கூட்டணியில் இணைய தயாராக உள்ளது'' என்றார்.