Skip to main content

புதிய சின்னத்தில் பழனிசாமி அணி போட்டி? - மீண்டும் திரும்புகிறதா 1989?

Published on 26/01/2023 | Edited on 26/01/2023

 

Edappadi Palaniswami discussed on by-elections

 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த முறை திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சிக்கே அந்த தொகுதியை ஒதுக்கியிருந்த நிலையில், இம்முறையும் காங்கிரஸ் கட்சி சார்பாக மறைந்த திருமகன் ஈ.வெ.ராவின் தந்தையும் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடுகிறார். 

 

அதேசமயம் இவரை எதிர்த்து நேரடியாகவே அதிமுக களமிறங்கவுள்ள நிலையில், வேட்பாளர்களிடம் விருப்ப மனுக்களைப் பெற்று வருகிறது. விருப்ப மனு தாக்கல் செய்யும் கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான தேர்தல் பணிக்குழு பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது. இதில் அவைத் தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்பட 106 பேர் இடம்பெற்றுள்ளனர். 

 

இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் குறித்து வேட்பாளரை தேர்வு செய்ய எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஈரோடு அருகே வில்லரசன் பட்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் சுமார் 7 மணி நேரம் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக இரு அணிகளாகப் பிரிந்தபோது ஜெயலலிதா சேவல் சின்னத்தில் நின்று தனது பலத்தை நிரூபித்தது போல் தனது அணியும் பலத்தை நிரூபிக்க வேண்டும் என அதிமுக நிர்வாகிகளிடம் பழனிசாமி கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் நாளை மீண்டும் நடைபெறும் கூட்டத்தில் வேட்பாளர் அறிவிக்கப்படலாம் எனவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

இக்கூட்டத்தில் தேர்தல் வியூகம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிகளுக்காக 106 பேர் கொண்ட குழுவை அதிமுக அமைத்துள்ள நிலையில் மேலும் 5 பேர் இந்தக் குழுவில் இணைக்கப்பட்டுள்ளனர். இது ஒருபுறம் இருக்க, அதிமுக சார்பில் இடைத்தேர்தலில் போட்டியிடவுள்ள எங்கள் அணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளிடம் ஓ.பி.எஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ் இடைத்தேர்தலில் தனது அணியின் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் எனவும் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

திருச்சியில் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு

Published on 19/06/2024 | Edited on 19/06/2024
Enthusiastic reception for Edappadi Palaniswami in Trichy

தமிழக முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், அதிமுக பொதுச்செயலாளர், எடப்பாடி பழனிசாமி தஞ்சை, நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி வந்தடைந்த அவருக்கு திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட கழகம் சார்பில் அதிமுகவினர் செண்டை மேள தாளங்கள் முழங்க, உற்சாக வரவேற்பு அளித்தனர். 

இதில், அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் எம்பி குமார், புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி, திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் துணை மேயர் சீனிவாசன் ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுயுர மலர் மாலை அணிவித்தும், பொன்னாடை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும், புத்தகங்கள் வழங்கியும சிறப்பான வரவேற்பு அளித்தனர்.  

முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வளர்மதி, சிவபதி, அமைப்புச் செயலாளர் ரத்னவேல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் எம்.பி.கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து. சாலை வழிப் பயணமாக புறப்பட்டுச் சென்ற எடப்பாடி.பழனிசாமிக்கு, தஞ்சை மத்திய மாவட்டம் சார்பில் வல்லம் பிரிவு சாலையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தஞ்சை மாவட்டத்தில் மன்னார்குடி ஒன்றிய பெருந்தலைவர் மனோகரன் இல்ல திருமண நிகழ்வில் பங்கேற்கிறார். அதனைத் தொடர்ந்து, நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெறும் முன்னாள் அமைச்சர் ஜெயபால் இல்ல வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் பல்வேறு கட்சிகளில் இருந்து வந்த நிர்வாகிகள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின் இன்று மாலை மீண்டும் திருச்சி விமான நிலையம் வநதடைந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

Next Story

அதிமுக-தேமுதிக கூட்டணி முறிவா?;பாஜகவை நெருங்கும் பிரேமலதா

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
Will the AIADMK-DMK alliance break up?-Premalata approaching the BJP

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கலில் தீவிரம் காட்டி வரும் நிலையில், அதிமுக இந்த இடைத்தேர்தலை புறக்கணிக்க முடிவெடுத்துள்ளது. அதன் கூட்டணியில் இருக்கும் தேமுதிகவும் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது.

அதேநேரம் திமுக தலைமையிலான தனது கூட்டணியை நாடாளுமன்றத் தேர்தலிலும் அப்படியே அரவணைத்துக் கொண்டு சென்றார் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின். அவரின் சாதுர்யமான அரசியலால் திமுக கூட்டணியில் எந்த முரண்பாடும் வரவில்லை. முக்கியமான முடிவுகள் அனைத்தையும் கூட்டணியினரோடு கலந்தாலோசித்து எடுத்து வருகிறார் ஸ்டாலின். இதனால் திமுக கூட்டணி உறுதியாக இருந்து வருகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை அறிவித்து பரப்புரை பணிகளை தொடங்கியுள்ளது.

அதேபோல், நாடாளுமன்றத் தேர்தலில் உருவான பாஜக-பாமக கூட்டணி, இடைத்தேர்தலிலும் தொடர்கிறது. இதற்காக இரு கட்சிகளும் கலந்துபேசி பாமக போட்டியிடும் என்றும், பாமகவின் வெற்றிக்கு பாஜக உதவும் என்றும் அக்கட்சியின் தலைமை அறிவித்தது. இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் உருவான அதிமுக-தேமுதிக கூட்டணி,தேர்தலுக்குப் பிறகு முறிந்து விட்டது என்கிறார்கள்.

அதாவது, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவதில்லை என்றும், தேர்தலைப் புறக்கணிக்கிறோம் என்றும் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். தனது கூட்டணிக் கட்சியான  தேமுதிகவுடன் கலந்தாலோசிக்காமலே அதிமுகவினரிடம் மட்டும் ஆலோசித்து தன்னிச்சையாக அறிவித்தார் எடப்பாடி. இந்த முடிவு, தேமுதிக பிரேமலதாவை அதிர்ச்சியடைய வைத்தது. அதே சமயம், தனது கட்சி நிர்வாகிகளுடன் விவாதித்து, 'இடைத்தேர்தலை தேமுதிக புறக்கணிக்கிறது' என்று தன்னிச்சையாக அறவித்தார் பிரேமலதா.

ஆக, 'அதிமுக-தேமுதிக கூட்டணி உறவு, தேனிலவு முடிந்ததும் முறிந்து விட்டது. மத்தியில் பாஜக ஆட்சி மீண்டும் மலர்ந்திருப்பதால் பிரேமலதாவின் பார்வை பாஜக பக்கம் திரும்பியுள்ளது. பாஜகவின் மேலிடத் தலைவர்களை சந்திக்க முயற்சித்து வருகிறார் பிரேமலதா' என்கிறார்கள் தேமுதிக மாநில நிர்வாகிகள்.