Advertisment

“கள்ளச்சாராய ஆட்சிக்கு கள்ளக்குறிச்சியே சாட்சி” - எடப்பாடி பழனிசாமி தாக்கு!

edappadi palaniswami criticized mk stalin dmk govt

கள்ளக்குறிச்சி ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருக்கோவிலூர் அருகே மாவட்ட திமுக சார்பில் இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு மதுவுடன் சேர்த்து அசைவ விருந்து அளிக்கப்பட்டுள்ளது. விருந்தில் தண்ணீர் பாட்டில் வைப்பது போன்று இலைக்கு அருகே பீர் பாட்டிலும் வைக்கப்பட்டிருந்தது பெரும் பேசு பொருளாக மாறியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில், “கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள் புத்தகப் பையில் அரிவாள்களே சாட்சி! பெண்கள் பாதுகாப்பின்மைக்கு அண்ணா பல்கலைக்கழகமே சாட்சி.., போதைப் பொருள் கடத்தலுக்கு திமுக அயலக அணியே சாட்சி! போதையின் பாதைக்கு ரிஷிவந்தியம் திமுக இளைஞரணி கூட்டமே சாட்சி! ஸ்டாலின் மாடல் சமூக (அ) நீதிக்கு வேங்கைவயலே சாட்சி! ஏற்கனவே ஆப்ரேஷன் கஞ்சா 2.0, 3.0, 4.0 அனைத்துமே ஃபெயிலியர்(Failure). இதில் இன்று வெர்சன் 2.0 லோடிங்(Loading) ஆம்.

Advertisment

அதிமுக ஆட்சியில் தலை நிமிர்ந்து இருந்த தமிழ்நாட்டை, ஜாமினில் வந்தவர்க்கெல்லாம் தியாகி பட்டம் கொடுத்து தலைகுனிய வைத்ததற்கு பொம்மை முதலமைச்சரே சாட்சி! 2026-ல் ஒரே வெர்சன்(version) தான் - அது #TN_AIADMK version தான். மக்கள் வருகின்ற 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் பெரிய 'ஓ' (0) வாக போட்டு #ByeByeStalin என்று சொல்லும்போது தாங்கள் சட்டையை கிழித்துக்கொண்டு தவழ்ந்து செல்லாமல் இருந்தால் சரி” என்று குறிப்பிட்டுள்ளார்.

kallakurichi admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe