Edappadi palaniswami condemned Cm stalin

போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்த வேண்டும் எனஅ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Advertisment

இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘சேலம் மாவட்டம் பெருமாம்பட்டி அருகேயுள்ள பூசநாயக்கனூர் மேல்காடு குடியிருப்பு பகுதியில் கஞ்சா போதையில் 20க்கும் மேற்பட்ட வாலிபர்கள் அராஜகத்தில் ஈடுபட்டதை தட்டி கேட்டவர்களின் வீடு புகுந்து கொலைவெறித் தாக்குதல் நடத்தியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

Advertisment

திமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கமும், அதனால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் குறித்தும் நான் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்தும், அப்படி எதுவுமே இல்லாதாற்போல் ஒரு மாய பிம்பத்தை மு.க.ஸ்டாலினின் திமுக அரசு கட்டமைப்பதன் கொடிய விளைவே இதுபோன்ற நிகழ்வுகள்.

போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவோ, சட்டம் ஒழுங்கைக் காக்கவோ மூன்றாண்டுகளில் ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாத திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். போதைக்கும்பலின் தாக்குதலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளோருக்கு உரிய சிகிச்சை அளிப்பதுடன், இக்குற்றச்செயலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வதுடன், கடும் சட்ட நடவடிக்கை எடுக்க திமுக அரசை வலியுறுத்துகிறேன். மேலும், இனியாவது, போதைப்பொருட்களால் இளைஞர்கள் பாதிக்கப்படுவதையும், இதனால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் உணர்ந்து, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்துமாறு திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisment