Skip to main content

“எடப்பாடி பழனிசாமியை நம்ப முடியாது...” - பண்ருட்டி ராமச்சந்திரன்

Published on 28/09/2023 | Edited on 28/09/2023

 

Edappadi Palaniswami cannot be trusted says panruti Ramachandran

 

எடப்பாடி பழனிசாமியை நம்ப முடியாது என பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

 

அதிமுக - பாஜக இடையே கூட்டணியில் முறிவு ஏற்பட்ட நிலையில், பாஜக உடனான கூட்டணி குறித்து தனது அணி நிர்வாகிகளுடன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தீவிர ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஓ. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த வைத்திலிங்கம், பண்ருட்டி ராமச்சந்திரன், மனோஜ் பாண்டியன், மருது அழகுராஜ், புகழேந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

இந்நிலையில் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு ஓ. பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பண்ருட்டி ராமச்சந்திரன் பேசுகையில், “அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும். சட்ட போராட்டம் ஒரு புறமும், மக்களை சந்திக்கும் புரட்சி பயணம் ஒரு புறமும் தொடரும். இன்று ஏற்பட்டுள்ள சூழலை பொறுத்தவரையில் எப்போதும் கூறி வந்ததைப் போல எடப்பாடி பழனிசாமியை நம்ப முடியாது என்பதை மீண்டும் அவர் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல் இந்தியாவிற்கே வெளிப்படுத்தியுள்ளார்.

 

அரசியலில் நம்பகத்தன்மை என்பது ஒரு தலைவருக்கு அடிப்படை பண்பு. மக்கள் சார்பாக நாட்டை ஆட்சி செய்யும் உரிமையை நம்பிக்கைக்கு உரிய ஒருவரிடம் தான் தர வேண்டும். அந்த நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மைக்கு உரியவர் ஓபிஎஸ். நம்பகத்தன்மை அற்றவர் யார் என்பதை இந்த நாடும் உலகமும் அறியும்” எனத் தெரிவித்தார். 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

கொட்டும் மழையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

Study of Minister Udayanidhi Stalin in rain

 

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

 

அதே சமயம் வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாகச் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (04.12.2023) ஒரு நாள் மட்டும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை வி.பி. ராமன் சாலையில் மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் தண்ணீரை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த சூழலில் தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியை கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ் குமார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் எனப் பலரும் உடன் இருந்தனர். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

சென்னை மெட்ரோ, புறநகர் ரயில் சேவைகளில் மாற்றம்

Published on 03/12/2023 | Edited on 03/12/2023

 

Change in Chennai Metro, Suburban Train Services

 

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. இதற்கு மிக்ஜாம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாகச் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (04.12.2023) ஒரு நாள் மட்டும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் சென்னை புறநகர் ரயில்கள் நாளை (04.12.2023) ஞாயிற்றுக்கிழமை பின்பற்றப்படும் அட்டவணைப்படி இயங்கும் எனத் தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை மெட்ரோ ரயில்கள் நாளை (04.12.2023) ஒரு நாள் மட்டும் சனிக்கிழமை நேர அட்டவணையின் படி இயக்கப்படும் என அறிவித்துள்ளது.

 

இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “மிக்ஜாம் புயல் காரணமாக நாளை 04.12.2023 (திங்கட்கிழமை) ஒரு நாள் மட்டும் சனிக்கிழமை நேர அட்டவணையின்படி மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும். அதன்படி காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். காலை 5 மணி முதல் 8 மணி வரை, காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்