





மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பின் பல்வேறு சட்டப் போராட்டங்கள் நடத்தி அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆகியுள்ள எடப்பாடி பழனிசாமி இன்று தனது 69வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளை அதிமுகவினர் பல்வேறு இடங்களில் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில், எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் ஆரோக்கியமாக இருக்கவும் மீண்டும் முதல்வராகவும் வேண்டி கட்சியின் பெண் உறுப்பினர்கள் 69 பேருடன் எம்.ஜி.ஆர் இளைஞரணி இணை செயலாளர் சுனில் தலைமையில் சென்னை மேற்கு மாம்பலம் கல்கத்தா காளி பாரி கோவிலில் மண்சோறு சாப்பிட்டு பழனிசாமி பெயருக்கு பூஜை செய்யப்பட்டது. இந்த மண்சோறு சாப்பிடும் நிகழ்வை முன்னாள் அமைச்சர் வளர்மதி துவக்கி வைத்தார். மேலும் இந்த நிகழ்வில் பல்வேறு அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்துகொண்டனர்.