Advertisment

அதிமுக நிறுவனரும் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 35 வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. காலை முதல் மக்கள் மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் கூடி தொடர்ந்துநினைவு அஞ்சலி செலுத்திய வண்ணம் இருக்கின்றனர். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் வந்து மலர் வளையம்வைத்தும் மலர் தூவியும்அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் அதிமுகவின் தொண்டர்கள் என ஏராளமானோர்கலந்து கொண்டனர்.