ரிசல்ட் வரைக்கும் பொறுமையாக இருங்க... தோப்பு வெங்கடாசலத்தை சமாதானம் செய்யும் இ.பி.எஸ். 

தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதற்கான தேர்தல் முடிவுகள் வரும் 23ஆம் தேதி வெளியாக உள்ளன. இந்த முடிவுகள்தான் அதிமுக ஆட்சி நீடிக்குமா? ஆட்சி மாறுமா? கலையுமா? என்பது தெரிய வரும்.

ஆட்சியை தக்க வைக்க அனைத்து விதமான வியூகங்களிலும் ஈடுபட்டுள்ளார் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இந்த நிலையில் அம்மா பேரவை மாநில இணை செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக பெருந்துறை எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் தெரிவித்துள்ளார். மேலும் கட்சி பொறுப்பில் இருந்து விலகுவதாக எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், அதிமுகவில் இருந்துவிலகுவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று தோப்பு வெங்கடாசலம் கூறியதாக தகவல்கள் வெளியாகியது.

edappadi palanisamy - thoppu vengadachalam - admk -

இந்த நிலையில் சேலத்தில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தோப்பு வெங்கடாசலம் சந்தித்துப் பேசியுள்ளார். கே.சி.கருப்பணன் உடனான கருத்து வேறுபாடு காரணமாக, சில ஆண்டுகளாகவே தாங்கள் அதிருப்தியில் இருப்பது தெரியும், தேர்தல் முடிவுகள் வெளியாகட்டும், உங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று சமாதானப்படுத்தியுள்ளார். இருப்பினும் தான் விலகுவதாக எடுத்த முடிவில் மாற்றமில்லை என்று தெரிவித்து வருகிறாராம் தோப்பு வெங்கடாசலம்.

கட்சியில் இருந்து வெங்கடாசலம் விலகினால், சட்டமன்றத்தில் அதிமுகவுக்கு மேலும் பலம் குறையும், ஆட்சியை கலைக்க மேலும் சில எம்எல்ஏக்களை வலைக்க எதிரணியினர் திட்டமிட்டால் என்ன செய்வது என்பது குறித்து கட்சி சீனியர்களிடம் ஆலோசனை செய்து வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

admk Edappadi Palanisamy thoppu venkatachalam
இதையும் படியுங்கள்
Subscribe