Edappadi palanisamy speech at jayalalitha memorial

சென்னை மெரினாவில் இன்று தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் திறக்கப்பட்டது. இதனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.

Advertisment

இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிள் பலர் கலந்துகொண்டனர். நினைவிடத்தை திறந்துவைத்துவிட்டு பேசியஎடப்பாடி பழனிசாமி, “ஜெயலலிதா சட்டமன்றத்தில், ‘100 ஆண்டுகள் ஆனாலும் அ.தி.மு.க.வின் ஆட்சியும் கட்சியும் தொடரும். எவராலும் அழிக்கமுடியாது. எஃகு கோட்டையாகத் திகழும்’ எனத் தெரிவித்தார். அவர் தெரிவித்தபடியே வருகின்ற சட்டமன்றத் தேர்தலிலும் பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்று ஜெயலலிதாவின் லட்சியத்தை நிறைவேற்றுவோம்.

Advertisment

ஜெயலலிதாவின் நினைவிடத்தை,சிறப்பான முறையில் உலக வரலாற்றில் இடம்பெறும் வகையில் அமைப்பதற்குத் தங்கள் உழைப்பை நல்கியிருக்கும் பொதுப் பணித்துறை மற்றும் செய்தித்துறை அலுவலர்கள், பணியாளர்கள் தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் இதற்காக உழைத்த அனைவரையும் இந்த நேரத்தில் பாராட்டுகிறேன்.

பல்வேறு இடங்களிலிருந்து வந்திருக்கும் லட்சக்கணக்கான தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாகப் பயணம் செய்து பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” இவ்வாறு பேசினார்.