Edappadi palanisamy speech at dindigul district palani

Advertisment

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அதிமுகவின் கூட்டம் நடந்தது. இதில், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ”மக்களைப்பற்றியும்,மாணவர்களைப்பற்றியும் இந்தஆட்சிக்குகவலையில்லை. ஸ்டாலினின் அரசு குழு அரசு. இதுவரை 37 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றால் ஒரு பயனும் இல்லை. ஸ்டாலின் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது. இந்தியாவில் ஜனநாயக முறைப்படி நடைபெறக்கூடிய ஒரே கட்சி அதிமுக தான்.

ஸ்டாலின், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். ஸ்டாலின் மக்களை மறந்தால் மக்கள் ஸ்டாலினை மறப்பது உறுதி.மக்களைப்பற்றி கொஞ்சம்கூட கவலைப்படாமல் இருக்கக்கூடிய ஒரே முதலமைச்சர் ஸ்டாலின் தான். வாக்களித்தமக்களுக்குசொத்து வரி, மின்கட்டண உயர்வை இந்த அரசுஅன்பளிப்பாகதந்துள்ளது” என்று பேசினார்.