Advertisment

அமைச்சர்களுக்கு செக் வைத்த எடப்பாடி... கடுப்பான அமைச்சர்கள்!

சென்னை ராயபேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, உள்ளாட்சி தேர்தலில் 95 சதவிகித இடங்களில் நாம் வெற்றிபெறுவோம். நாங்குநேரி, விக்கிரவாண்டியில் எப்படி திட்டமிட்டு வெற்றி பெற்றோமோ அதேபோல் வெற்றிபெற வேண்டும். உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் மனுக்கள் பெற குழு அமைக்கப்படும். சிறந்த வேட்பாளர்களை தயார்படுத்த வேண்டும் என பேசியுள்ளார். மேலும் வர இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் அமைச்சர் ஜெயக்குமார் மகனுக்கு சென்னை மேயர் பதவி வாங்கும் எண்ணத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதே போல் அதிமுகவில் இருக்கும் பல அமைச்சர்கள் உள்ளாட்சி தேர்தலில் வாரிசுகளுக்கு சீட் கேட்கலாம் என்ற முடிவில் இருந்துள்ளனர்.

Advertisment

admk

இந்த நிலையில் நேற்று கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டும் என்றால், ஒரு சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்று அதிமுகவின் அவை தலைவர் மதுசூதனன் கூறியதாக சொல்லப்படுகிறது. அப்போது உள்ளாட்சி தேர்தலில் வாரிசுகளுக்கு சீட் கேட்காமல் கட்சியில் சிறப்பாக பணியாற்றிவர்களுக்கு சீட் வழங்குவதில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று அதிமுக அவைத்தலைவர் பேசியதாக சொல்லப்படுகிறது. இதனால் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட பல அமைச்சர்களின் கனவு பலிக்காது என்று கூறிவருகின்றனர். மேலும் கூட்டணிக் கட்சிகள், உட்கட்சி மோதல் போன்ற பல பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் கூறியதாகவும் சொல்கின்றனர். இதனால் உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்கலாம் என்றும் பேசியதாக கூறுகின்றனர்.

politics Meeting minister eps admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe