edappadi palanisamy  o panneerselvam

Advertisment

தமிழகத்தில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் மேற்கொண்டார். 13 நாள் சுற்றுப்பயணம் முடிந்து இன்று அதிகாலை 2.40 மணிக்கு சென்னை திரும்பிய அவருக்கு விமான நிலையத்தில் அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

தொண்டர்களின் வரவேற்பை பெற்றுக்கொண்ட முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடையாரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றார். அங்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பூங்கொத்து கொடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்தார்.