ஓ.பி.எஸ்.சுக்காக எனக்கு எதிரா எந்த அஸ்திரத்தையும் கையில் எடுக்க... சகாக்களிடம் எடப்பாடி பழனிசாமி

நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 22 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் நாளை வெளியாக உள்ளன. இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் திக் திக்கில் இருக்கிறார்கள்.

முதல்வர் பதவிக்கு எந்த ஆபத்தும் வரக்கூடாது என்பதற்காக பிரார்த்தனை செய்கிறார் எடப்பாடி பழனிசாமி. மேலும் சேலத்தில் இருக்கும் தனது பங்களாவில் கேரள நம்பூதிரிகள் ஒன்பது வேரை வரவழைத்து சிறப்பு யாகம் நடத்தியுள்ளார். அதில் குடும்ப உறுப்பினர்கள் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை.

eps-eps

இதேபோல துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திருப்பதியில் சிறப்பு தரிசனம் செய்திருக்கிறார். இந்த தரிசனத்தின்போது டெல்லியில் பாஜக ஆட்சியும், தமிழ்நாட்டில் அம்மா ஆட்சியும் மீண்டும் மலர வேண்டும் என அர்ச்சகர்களை மந்திரம் ஓதச்சொன்னாராம். இவர்களிடையே அமமுக பொதுச்செயலாளர் தினகரன் திருச்சி ஸ்ரீரங்கத்தின் தரிசனம் செய்திருக்கிறார்.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு பாஜக அணியில் திமுக சேர்ந்துவிடுமோ என்கிற பயம் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறது. அதனால்தான் பாஜகவோடு திமுக பேசிக்கிட்டு இருக்கிறது என்று அமைச்சர் ஜெயக்குமாரை சொல்ல வைத்து, அதனைத் தொடர்ந்து பாஜகவின் தமிழிசை சௌந்திரராஜனும் சொல்லியிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் தன் அமைச்சரவை சகாக்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, பாஜக என்னை இன்னும் 6 மாதம் கூட பதவியில் விட்டு வைக்காது. ஓ.பி.எஸ்.சுக்காக எனக்கு எதிரா அது எந்த அஸ்திரத்தையும் கையில் எடுக்கும். அதனால் அதுக்கு இடம் கொடுக்காமல், நாம் நம் ஆதரவைக் கட்சியில் பலப்படுத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். டெல்லிப் பக்கம் இருந்து அவருக்குக் கிடைத்த சில தகவல்கள்தான் அவரை இப்படி உஷார்ப்படுத்தியிருக்கிறது என்கிறார்கள் அவரது கட்சியினர்.

admk Edappadi Palanisamy O Panneerselvam
இதையும் படியுங்கள்
Subscribe