பிரதமர் மோடியை சந்தித்தார் முதல்வர் பழனிசாமி..!

Edappadi palanisamy met PM Modi

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இரண்டு நாள் பயணமாக நேற்று (18/01/2021) காலை 11.55 மணிக்கு டெல்லி புறப்பட்டார். டெல்லியில் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்க திட்டமிடப்பட்டிருந்தது. அதன்படி நேற்று இரவு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.

அதனைத் தொடர்ந்து இன்று (19.01.2021) காலை பிரதமர் மோடியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில், வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான அ.தி.மு.க., பா.ஜ.க. இடையான கூட்டணி தொகுதிகள் பங்கீடு குறித்து பேச வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. மெரினாவில் கட்டப்பட்டுவரும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிட திறப்பு விழா, வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழா, காவிரி - குண்டாறு இணைப்பு திட்ட அடிக்கல், கல்லணை சீரமைப்பு உள்ளிட்ட பல திட்டங்களின் தொடக்க விழாக்களுக்கு அழைப்பு விடுக்கவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

edappadi pazhaniswamy Narendra Modi
இதையும் படியுங்கள்
Subscribe