Advertisment

''அப்படி என்ன துரோகம் செய்துவிட்டோம்... பாமக சொல்லியே ஆக வேண்டும்'' - எடப்பாடி பழனிசாமி பேட்டி!

Edappadi Palanisamy interview

Advertisment

அதிமுக கூட்டணியில் பாமக இல்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்துப் பேசுகையில், ''தங்கமணிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்படுவது கண்டிக்கத்தக்கது. அதிமுகவுடன் நேரடியாக மோத முடியாமல் லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் சோதனை நடத்துகிறது திமுக அரசு. பாமகவிற்கு அதிமுக செய்த துரோகம் என்னவென்று பாமகதான் சொல்ல வேண்டும். குறைந்த இடத்தைக் கொடுத்தோம், அதனால்தான் தோற்றோம் என்கிறார்கள். ஆனால் மக்கள்தான் ஓட்டுப்போட வேண்டும். நீங்களும் நானும் ஓட்டுப்போட்டு வெற்றிபெற முடியாது. உள்ளாட்சித் தேர்தலில் பாமக கூட்டணியில் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்'' என்றார்.

தேர்தல் நேரத்தில் இப்படி மாறி மாறி கூட்டணி வைக்கிறார்களே என்ற செய்தியாளரின் கேள்விக்கு, ''அது அவர்களின் வாடிக்கை'' என்றார்.

admk edappadi pazhaniswamy omalur pmk Salem
இதையும் படியுங்கள்
Subscribe