KMDK

எடப்பாடி பழனிசாமிக்கு ஈஸ்வரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் 07.10.2020 அன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் அறிவித்தார்.

Advertisment

அதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு அக்கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2021 -ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கின்ற தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.

Advertisment