kkkk

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள அதியூர் கிராமத்தில் அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

Advertisment

இந்த கூட்டத்தில் விருத்தாசலம் அதிமுக எம்எல்ஏ கலைச்செல்வன் பேசும்போது, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரிவுப்படுத்தி சிறப்பாக செய்து வருகிறார். எடப்பாடி பழனிசாமி அதிமுக கிளைச்செயலாளராக இருந்து படிப்படியாக வளர்ந்து தற்போது முதலமைச்சராக உயர்ந்துள்ளார்.

Advertisment

டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாத்து வருகிறார். எனவே அடுத்த ஆண்டு நடைபேற உள்ள தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்க வேண்டும். மேலும் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக பதவியேற்க பாசறை நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என்றார்.