Advertisment

Advertisment

தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்க துபாய் நகரம் மற்றும் இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசுமுறை பயணமாக கடந்த மாதம் 28-ந் தேதி தனது சென்றார். தனது 14 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு இன்று காலை சென்னை வந்தடைந்தார். அவரை வரவேற்க அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் விமான நிலையத்தில் குவிந்தனர். எடப்பாடி பழனிசாமி வெளிநாடு புறப்படும்போது எப்படி அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் குவிக்கப்பட்டிருந்தனரோ, அதைப்போலவே அவர் திரும்பி வரும்போது அதனைவிட அதிகமாக அதிமுக தொண்டர்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.