style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும், முதல் அமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழிசை கூறியிருப்பதாவது, ''சாமானிய மக்களின் தொண்டராக தன் அரசியல் வாழ்க்கையை தொடங்கி மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்கள் வழியில் சாமானிய மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றி ஏழை, எளிய மக்களின் கனவுகளை நனவாக்கி வரும் தமிழக முதல்வர் அண்ணன் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.தாங்கள் நீண்ட ஆயுளுடன்,உடல் நலத்துடன் மக்கள் சேவையாற்ற இறைவனை பிராத்திக்கின்றேன். இந்த தேர்தல் வெற்றியோடு இன்னும் பல வெற்றிகளை பெற்று மக்கள் தொண்டாற்ற வாழ்த்துகிறேன்''. இவ்வாறு கூறியுள்ளார்.