ADVERTISEMENT

எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு... ராமதாஸ் வரவேற்பு... 

07:16 PM Jul 23, 2020 | rajavel

ADVERTISEMENT

கல்லூரித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது என பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “கலை மற்றும் அறிவியல் பட்டப் படிப்புகள், பட்ட மேற்படிப்புகள், பொறியியல் பட்டம் மற்றும் பட்டயப்படிப்புகளுக்கான இறுதி பருவம் தவிர்த்து, மீதமுள்ள அனைத்து பருவத்தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. இது மாணவர் நலன் காக்கும் செயல்!

இதைத்தான் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. கல்லூரித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பது பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும். ஆனால், இது மட்டும் போதாது. இறுதி பருவத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட வேண்டும்!

இறுதி பருவத் தேர்வுகளை ரத்து செய்ய மத்திய அரசுக்கு முதலமைச்சர் எழுதிய கடிதத்திற்கு குறிப்பிட்ட காலத்திற்குள் பதில் வரவில்லை என்றால், இறுதி பருவத் தேர்வுகளை தமிழக அரசு தன்னிச்சையாக ரத்து செய்து தேர்ச்சி அளிக்க வேண்டும்” இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT