பதட்டம், பரபரப்பு - அரசு நிகழ்ச்சியில் பங்கேற்காத எடப்பாடி பழனிசாமி

edappadi palanisamy

சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் இன்று நடந்த நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவில்லை. சுகாதாரத்துறையில் பணி நியமண ஆணைகள் வழங்கும் விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இன்று காலை தீர்ப்பு வரவுள்ள நிலையில் அதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துடன் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இந்த பரபரப்பான சூழ்நிலையில்ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் இந்த நிகழ்ச்சி நடப்பதால்,எடப்பாடி பழனிசாமி இந்தநிகழ்ச்சியில் பங்கேற்வில்லை என்று கூறப்படுகிறது.

Edappadi Palanisamy
இதையும் படியுங்கள்
Subscribe