Theni district eps peravai

Advertisment

துணை முதல்வர் ஓபிஎஸ்சின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கம்பம் கே.எம்.பட்டியை சேர்ந்த பால்பாண்டியன் திடீரென எடப்பாடியார் பேரவை என்ற பெயரில் ஆதரவாளர்களை திரட்டினார்.

இ.பி.எஸ். படம் பெரிதாகவும், ஓபிஎஸ் படம் சிறிதாகவும் போட்டு மெகா சைஸ் போஸ்டர் அடித்து மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளில் இருக்க கூடிய நகரம் முதல் பட்டிதொட்டிகள் வரை அந்த பேரவை சார்பில் ஒட்டப்பட்டது.

அதை கண்டு ஓபிஎஸ் உறவினர்களும், ஆதரவாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அதோடு போஸ்டர் ஒட்டிய பால்பாண்டியையும் வலை போட்டு தேடி வந்தனர்.இது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இந்த நிலையில் திடீரென தேனி மாவட்ட "எடப்பாடியார் பேரவை சார்பில் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்" என்ற பெயரில் மெகா சைஸ் பிளக்ஸ் பேனர்கள் அடித்து கம்பம் உள்பட சில பகுதிகளில் பால்பாண்டியன் வைத்து இருக்கிறார்.

இப்படி வைக்கபட்ட பிளக்ஸ் பேனர்களில் எடப்பாடி முதல்வர் சீட்டில் உட்கார்ந்து இருப்பதுபோல் படத்தை பெரிய சைஸ்சில் போட்டு அதோடு ஜெ படத்தையும் மட்டும் போட்டு இருக்கிறாரே தவிர, ஓபிஎஸ் படத்தை சிறிய அளவில் கூட போடாமல் ஒட்டு மொத்தத்திற்கே புறக்கணித்து விட்டார். இப்படி ஓபிஎஸ்ஸின் சொந்த மாவட்டத்திலையே ஓபிஎஸ்சை ஓரம்கட்டி படம் போடாமல் பிளக்ஸ் பேனர்கள் வைத்து இருப்பது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியை ஏற்படுத்தி வருகிறது.