தமிழ்நாடுஆளுனரைதமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நாளை (20.10.2021) சந்திக்கஇருப்பதாகத்தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி அண்மையில் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில் நாளை தமிழ்நாடு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரைச்சந்திக்கஇருப்பதாகத்தகவல் வெளியாகியுள்ளது. நடந்து முடிந்தசட்டமன்றக் கூட்டத்தொடரில் கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பான விவாதத்தின்போது அவையைப் புறக்கணித்த அதிமுகவினர், சாலையில் அமர்ந்து மறியல் செய்ததோடு அன்றைய ஆளுநர்பன்வாரிலால்புரோகித்தையும்சந்தித்து மனு அளித்திருந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்னாள் அமைச்சர்விஜயபாஸ்கருக்குசொந்தமான 50 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி நாளைஆளுநரைசந்திக்கஇருப்பதாகதகவல் வெளியாகியுள்ளது. அண்மையில், தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரியில்லை எனதமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைஆளுநரைச்சந்தித்து மனு அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து மத்திய இணையமைச்சரான எல். முருகனும் ஆளுநரைச்சந்தித்திருந்தார். அந்த வகையில் நாளை எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்திக்க இருக்கிறார்.
ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், கே.சி. வீரமணி, எஸ்.பி. வேலுமணி ஆகியோருக்குசொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவுசெய்து சோதனையில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.