Advertisment

“இன்னும் நிறைய அறிவிப்புகள் வரும்...” - எடப்பாடி பழனிசாமி 

ddd

அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என்று அறிவிக்கப்பட்ட உடன், அவர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மேலும் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார். கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய கடன்கள் தள்ளுபடி, ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போடப்பட்ட வழக்குகள் ரத்து, ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் ரத்து என தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

Advertisment

இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கபிலர்மலையில் பிரச்சாரத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதிலும் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. சிறந்த தலைவர்களுக்கு மணிமண்டபம், சிலைகள் அமைத்து வருகிறோம். அந்த வகையில் அல்லாள இளைய நாயக்கருக்கும் விரைவில் சிலை திறக்க உள்ளோம்.

Advertisment

தமிழகத்தில் வீடுகள் இல்லாத ஏழை மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். எத்தனை வீடுகள் வேண்டுமானாலும் கட்டித் தருவதற்குப் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். தேர்தல் நேரத்தில் மக்கள் மனம் குளிர இன்னும் ஏராளமான அறிவிப்புகள் வரும்.” என்றார்.

election campaign admk Edappadi Palanisamy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe