தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘சிலைகளை சேதப்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

edappadi on hraja

திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதைப் போல விரைவில் தமிழகத்தில் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என்று ஹெச்.ராஜா தெரிவித்திருந்தார். பல்வேறு தரப்பினரும் கடுமையாக கண்டனம் தெரிவித்த நிலையில் தனது பதிவை நீக்கிவிட்டு அது தன் அட்மின் தன் அனுமதியின்றி போட்ட பதிவு என்று பல்ட்டி அடித்திருந்தார். இதுகுறித்து தமிழக அரசு சார்பில் இன்னும் ஏன் எந்த கண்டனமும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வந்தது. தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஹெச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.

இந்நிலையில் இரண்டு நாட்களுக்குப் பிறகு இதுகுறித்து தமிழக முதல்வர் கருத்து தெரிவித்துள்ளார். இந்த பதிவை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ரீ ட்வீட் செய்துள்ளார்.