எடப்பாடி சசிகலாவிற்கு தூது விட என்ன காரணம் என்று விசாரித்த போது, அரசியலில் உள்ளே வெளியேன்னு இரண்டு கோணம் இருக்கிறது. பா.ஜ.க. தலைமையைப் பொறுத்தவரை, தமிழக முதல்வரா ஓ.பி.எஸ். இருக்கணும்னு நினைக்கிது. ஆனால் எடப்பாடி கேப் விடமாட்டேங்குறாரு. பா.ஜ.க.வை பொறுத்தவரை, மற்ற கட்சிகளில் உள்ளுக்குள்ளிருந்து புது எதிரிகளை உருவாக்கி பிரச்சினை பண்ணுறது வழக்கம். எடப்பாடிக்கு நெருக்கமான அமைச்சர்களான தங்கமணியையும் வேலுமணியையும் எதிரா தூண்டி ஆப்பு வைக்கும் வேலை வேகமாகியிருக்கு.
அடுத்த முதல்வர் நீங்கள்தான்னு இந்த இருவரிடமும் தனித்தனியே டெல்லித் தரப்பு ஆசைகாட்டி வச்சிருக்குதாம். தங்கமணி, வேலுமணி இவங்க இரண்டு பேரும்தான் மோடி-அமித்ஷா மூலமா எடப்பாடிக்கு எச்சரிக்கை மணிகளாகியிருக்காங்களாம். இதில் வேலுமணிக்கு ஜக்கி வாசுதேவ் சப்போர்ட் இருக்கு அதனால பாஜகவின் சப்போர்ட்டை பெற எளிதா இருக்கும்னு வேலுமணி தரப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.