"எடப்பாடிக்கு தான் அது சமாதி, எங்களுக்கு அது கோயில்"...கோபமான எடப்பாடி!

முதல்வர் எடப்பாடி, வெளிநாட்டுக்குக் கிளம்பிய போது, ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்துவதைத் தவிர்த்துட்டார். இது குறித்து அமைச்சர்கள் கேட்டதற்கு, முதல்வர் பொறுப்பேற்ற பிறகு, இப்போது தான் முதல் முறையாக வெளிநாட்டுக்கு செல்கிறேன். இந்த நேரத்தில் சமாதிக்கு செல்வது சரியாக இருக்காது என்று தனக்கு நெருங்கிய வட்டாரங்களில் கூறியதாக சொல்லப்பட்டது. தற்போது எடப்பாடி, தன் வெளிநாட்டு பயணத்தை முடித்துவிட்டு திரும்பியிருக்கும் நிலையில், எடப்பாடியால் சமாதி என்று சொல்லப்பட்ட ஜெயலலிதாவின் நினைவிடத்தில், சென்னை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பவானி சங்கர் என்பவரின் மகன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனால் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா மேல் எடப்பாடி கோபமாக இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

admk

கோகுல இந்திராவுக்கும், இந்த கல்யாணம் நடந்த விஷயத்தில் எடப்பாடிக்கு ஏற்பட்ட கோபம் பற்றி விசாரித்த போது, முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா முன்னிலையில் தான் ஜெயலலிதா நினைவிடத்தில் திருமண விழா நடைபெற்றுள்ளது. இதை கவனித்த சிலர், ஜெயலலிதாவால் பதவி சுகத்தை அனுபவிக்கும் எடப்பாடி போன்றவர்களுக்கு, ஜெ.’வின் நினைவிடம் வெறும் சமாதியாகத்தான் தெரியும். தொண்டர்களுக்குத்தான் இது கோயில் என்று கூறியது எடப்பாடியின் கவனித்திற்கு சென்றுள்ளது. இதனால் அப்செட்டான எடப்பாடி, கோகுல இந்திரா மீது கோபமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், கட்சி மாறும் மனநிலையில் இருந்த கோகுல இந்திராவுக்கு மேயர் பதவி கொடுக்கலாம் என்ற மனநிலையில் இருந்ததும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

admk eps jayalaitha minister politics statue
இதையும் படியுங்கள்
Subscribe