Advertisment

பூங்கொத்தை வாங்க மறுத்த எடப்பாடி...அதிர்ச்சியடைந்த நிர்வாகிகள்!

ஜனவரி 1ம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை நடைமுறைக்கு வந்தது. அரசு விதித்த தடையை மீறி பிளாஸ்டிக்கை கடையில் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், பிளாஸ்டிக் இருந்த பூங்கொத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாங்க மறுத்துள்ளது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதாவது கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் தலைவர் விக்கிரமராஜா மற்றும் நிர்வாகிகள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த போது முதல்வர் எடப்பாடிக்கு பூங்கொத்து கொடுத்துள்ளார்.

Advertisment

admk

முதல்வர் பழனிச்சாமி, அதனை வாங்க மறுத்துவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த நிர்வாகிகள் ஏன் வாங்கவில்லை என்று குழப்பத்தில் இருந்தனர். பின்பு தான் தெரிந்தது அதில் பிளாஸ்டிக் இருந்ததை கவனித்த முதல்வர் அதை வாங்கவில்லை என்று, அதன் பின்பு அந்த பூங்கொத்தை அதிகாரிகள் வாயில் வெளியே வைத்து விட்டனர். இதற்கு முன்பு கர்நாடகாவில் எடியூரப்பாவுக்கு வழங்கிய உலர்பழங்கள் அடங்கிய கூடையில் பிளாஸ்டிக் சுற்றப்பட்டு இருந்ததால் பெங்களூரு மாநகராட்சி மேயர் கங்காம்பிகே ரூ.500 அபராதம் செலுத்தினார். இந்த நிகழ்வி சமூக வலைத்தளங்களில் பரவியது. தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பிளாஸ்டிக் விஷயத்தில் விழிப்புணர்வோடு இருக்கிறார் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisment
Meeting Traders eps admk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe