Advertisment

“அதிமுகவில் வெற்றிடம் இல்லை” - எடப்பாடி பழனிசாமி

edapadi palanisamy says admk secretary meeting

Advertisment

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் அதிமுக மாவட்ட கழகச் செயலாளர்கள் கூட்டம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடங்கியுள்ளது.

முன்னதாக, ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள அதிமுக மாநில மாநாட்டிற்கான இலச்சினையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். அதிமுகவின் பொன்விழா ஆண்டு என்பதை குறிக்கும் வகையில் இந்த இலச்சினை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

இதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “அதிமுகவை வீழ்த்துவதற்கு திமுக ஆட்சியாளர்கள் அரங்கேற்றிய அனைத்து செயல்களையும் அதிமுகவினர் தகர்த்தெறிந்தனர். பல விமர்சனங்களை சந்தித்தோம். அதிலும் குறிப்பாக அதிமுக மூன்றாக நான்காக போய்விட்டது என்று சொன்னார்கள். அதிமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்துபோய்விட்டது என்ற கருத்துகளை பலர் முன்வைத்தனர். அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அதிமுகவினர் எழுச்சியோடு பணியாற்றி ஒன்றரைமாதக் காலத்தில் ஒரு கோடியே 60 லட்சம் உறுப்பினர்களை அதிமுகவில் சேர்த்துள்ளோம். இதன் மூலம் இனி அதிமுகவில் வெற்றிடம் இல்லை என்பதை நிரூபித்துள்ளோம். தமிழகத்திலேயே அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி அதிமுக தான். சிலர் இந்த இயக்கத்தை முடக்க வேண்டும், உடைக்க வேண்டும் என கனவு கண்டார்கள்” எனப் பேசினார்.

Advertisment

இதையடுத்து அதிமுக மாவட்ட கழகச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe