நடக்கவிருக்கும் நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில்பல்வேறு கட்சி தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். அவ்வாறு பிரச்சாரத்தில் ஈடுபடும் போது மக்கள் கூட்டம் இல்லையென்றால் கொஞ்சம் டென்ஷனாகி விடுகின்றனர். சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரத்தின் போது வெறிச்சோடிய ரோட்டில், பிரசார வாகனத்தில் முதல்வர் கும்பிட்டவாறு சென்ற பிரச்சார வீடியோ மற்றும் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் மிக வேகமாகப் பரவியது.

Advertisment

eps

இதனைப் பற்றி விசாரித்தபோது ரவீந்திரநாத்குமாருக்கு ஆதரவாக, முதல்வர், இ.பி.எஸ்., வேனில் பிரச்சாரம் செய்த போது பாதுகாப்பு காரணங்களுக்காக ஆற்றுப் பாலத்திலிருந்து தேர் முக்கு வரை ஆட்கள், வாகனங்கள் நிற்க தடை விதிக்கப்பட்டது. இதனால் அங்கு கூட்டம் கூடவில்லை என்றும் போலீஸ் மற்றும் உளவுத்துறையினரின் குறைபாட்டால் இந்த நிகழ்வு நடந்தது என்றும் அப்பகுதியில், மாடியில் இருந்து துல்லியமாக புகைப்படம் எடுக்க, போலீசார் எவ்வாறு அனுமதித்தனர்' என்ற, கேள்வியும் எழுந்துள்ளது. இது முழுக்க முழுக்க உளவுத்துறையின் குறைபாட்டால் நடந்தது என்று முதல்வர் தரப்பு கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.