நாடாளுமன்ற தேர்தலின் போது தமிழகத்தில் தேர்தல் பிரிவு டி.ஜி.பி.யா பொறுப்பேற்றுக் கொண்ட அசுதோஷ் சுக்லா, நேர்மையா நடக்கணும்னு விரும்பினாராம். அதனால், களத்தில் ஆளும் கட்சியின் பண விநியோகத்துக்கு பேருதவியா இருந்த உளவுத்துறை ஐ.ஜி. சத்திய மூர்த்தியையும், கொங்கு மண்டல ஐ.ஜி.யா இருந்த பெரியய்யாவையும் இடமாறுதல் செய்யணும்னு சுக்லா தேர்தல் ஆணையத்துக்குப் பரிந்துரை செய்தாராம்.

Advertisment

eps

இதில் அப்செட்டான உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தி மெடிக்கல் லீவுல போயிட்டார். இது எடப்பாடி தரப்புக்கு எரிச்சலை ஏற்படுத்துச்சாம். அதனால்தான் தேர்தல் முடிஞ்ச கையோடு, அசுதோஷ் சுக்லாவை மண்டபம் முகாமுக்கு தூக்கியடிச்சிட்டாங்க.மேலும் சமீப காலமாக ஐஏஎஸ்,ஐபிஎஸ் அதிகாரிகளை எடப்பாடி அரசு இட மாறுதல் கொடுத்து வருவது தொடர் கதையாகி வருகிறது