Advertisment

அதிமுக கோட்டையை காலி செய்த பிரமுகர்!திட்டி தீர்த்த எடப்பாடி!

எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டத்தில் ஒரு முக்கிய புள்ளியை பொரிந்து தள்ளி விட்டராம் எடப்பாடி.துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தான். உங்களால்தான் அ.தி.மு.க. கோட்டையான கொங்கு மண்டலமே நமக்கு எதிரா நிக்கிது. கொங்கு மண்டலத்தில் கோவையைத் தாண்டி பா.ஜ.க. மேலும் சில சீட்டுகளைக் கேட்டப்ப, அது எங்க கோட்டைன்னு தரமறுத்தோம். ஆனா, அங்கேயே நமக்குப் படு தோல்வி. இதுக்குக் காரணம் நீங்க தான். உங்க மகனை அடக்கிவைக்கத் தெரியலை.

Advertisment

admk

இப்ப கொங்கு கவுண்டர் சமூகப் பெண்கள் எல்லோரும் அ.தி.முக. வுக்கு எதிரா ஆயிட்டாங்க. அதே போல் இரட்டை இலைக்கே தொடர்ந்து ஓட்டுப் போடும் அருந்ததியர் சமூக மக்களும், இந்தமுறை நமக்கு ஓட்டுப் போடலை. தேர்தல் நேரத்தில் பிரச்சாரக் கூட்ட மேடையில், உங்க இன்னொரு மகனையும் ஏத்தி மக்களின் கோபத்தைச் சம்பாதிச்சிட்டீங்க. இப்ப பொள்ளாச்சி விவகாரத்தை சி.பி.ஐ. தீவிரமா தோண்டுது. ஒரு வேளை உங்க மகனை சி.பி.ஐ. கைது செஞ்சா, உதவிகேட்டு எங்கிட்ட வராதீங்கன்னு பல்வலியோடு பொரிஞ்சித் தள்ளிட்டாராம் எடப்பாடி.

Advertisment
pollachi jeyaraman loksabha election2019 Conference MLA admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe