அரசு சார்பில் பத்திரிகை உள்ளிட்ட ஊடகங்களுக்கு ஆண்டு தோறும் கோடிக் கணக்கான ரூபாய் அளவிற்கு விளம்பரம் கொடுப்பது வழக்கம். இப்படிக் கொடுக்கப்படும் விளம்பரங்களுக்கான கட்டணத்தில் 15 பர்சண்ட்டை கமிஷனாக ஒதுக்கிவிடுவார்கள். அதில் 10 பர்சண்ட் துறை அமைச்சர் தரப்புக்காம். மிச்ச 5 பர்சண்ட் துறை சார்ந்த அதிகாரிகளுக்காம். இந்த நிலையில் செய்தித்துறை அமைச்சரான கடம்பூர் ராஜுக்கு வந்து சேரவேண்டிய சில "சி'க்கள் வந்து சேரலை. அதை முதல்வர் அலுவலகத்திலேயே இருக்கும் ஒரு அதிகாரியும் ஒரு செய்தித்துறை உயர் அதிகாரியும் தங்கள் கஜானாவுக்குக் கொண்டு போயிட்டாங்களாம். அமைச்சர் தரப்பு இதை எடப்பாடிகிட்டயே பஞ்சாயத்து வச்சிடிச்சி. உங்களுக்கானது விரைவில் வந்து சேரும்னு அமைச்சரை ஆறுதல் படுத்தி அனுப்பிவச்சிருக்காராம் எடப்பாடி.

eps

Advertisment

Advertisment

இதே போல் முன்னாள் அமைச்சரும் ராஜ்யசபா எம்.பி.யுமான வைத்திலிங்கம், தனக்கு எந்த வருமானமும் இல்லைங்கிற கசப்பில் இருக்காருன்னு தெரிஞ்சிக்கிட்ட எடப்பாடி, சில மேஜிக்குகளைச் செய்தாராம். இதைத் தொடர்ந்து வைத்திலிங்கம் தரப்பைச் சேர்ந்த ஆட்கள், தஞ்சைப் பகுதி ஆறுகளில் இருந்து தினசரி 300 லோடுக்கும் குறையாமல் மணலை எந்த அனுமதியும் இல்லாமல் அள்ளிக்கொண்டு போகிறார்களாம். இதன் மூலம் மாதம் நல்ல வருமானம் பார்க்குறாங்கன்னு சொல்லப்படுகிறது.