Skip to main content
Nakkheeran Magazine Nakkheeran Magazine

ஸ்டாலின் பாணியில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் !

indiraprojects-large indiraprojects-mobile

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டமாக நடைப்பெறுகிறது. இதற்கான முதற்கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் ,  தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் இரண்டாம் கட்டமாக நடைப்பெறுகிறது. இதற்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. இதனால் தமிழகம் முழுவதும் தேசிய கட்சித்தலைவர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளனர். 

 

eps



அதனைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டம் , நடைப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வரும் நிலையில் , திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் சொந்தமான மாவட்டமான சேலம் மாநகரில் நடைப்பயணம் மேற்கொண்டு மக்களை நேரடியாக சந்தித்து வாக்கு சேகரித்து இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுப்படுகிறார். அதைத் தொடர்ந்து சேலம் பழைய பேருந்து நிலையம் , பட்டைக்கோவில் , தேர்வீதி , அஸ்தம்பட்டி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் தமிழக முதல்வர் நடந்து நடைப்பயணம் மேற்கொள்கிறார். இதனால் சேலம் மாநகரம் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


பி. சந்தோஷ், சேலம் .

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...