நடந்து முடிந்த நாடாளுமன்றம் மற்றும் இடைதேர்தலில் தினகரனின் கட்சி படு தோல்வி அடைந்தது. இதனால் தினகரனின் அ.ம.மு.க.வில் இருக்கும் பெரும்புள்ளிகள் பலரும் ஆளுக்கொரு திசையில் ஓடிக்கிட்டு இருக்காங்க. அவங்க மன நிலையைப் புரிஞ்சிக் கிட்டதால்தான் அ.தி.மு.க.வுக்குக் கொண்டு வரும் அசைன் மெண்ட்டை, முதல்வர் எடப்பாடி ஒரு டீமிடம் ஒப்படைச்சிருக்கார்ன்னு அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisment

admk

தினகரன் தரப்பு எம்.எல்.ஏ.க்களை நம்ம பக்கம் கொண்டுவாங்கன்னு அமைச்சர்களான ’சுகாதாரம்’ விஜயபாஸ்கர், ’உள்ளாட்சி’ வேலுமணி, எம்.எல்.ஏ.க்களான தி.நகர் சத்யா, விருகை ரவி ஆகியோர் அடங்கிய டீமிடம் அதிரடி அசைன்மெண்ட்டை ஒப்படைச்சிருக்கார் எடப்பாடி. அந்த வகையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வான அறந்தாங்கி ரத்தினசபாபதியை ஒரே அமுக்கா அமுக்கி அ.தி.மு.க.வுக்கு கொண்டு வந்தார் விஜயபாஸ்கர். அடுத்து விருத்தாசலம் கலைச்செல்வனையும் இந்த டீம் வெயிட்டா மடக்கிடுச்சி. அடுத்து கள்ளக்குறிச்சி பிரபுதான் பாக்கி. நான் எப்பவும் சின்னம்மா பக்கம்தான் இருப்பேன்னு சொல்லிக்கிட்டிருந்த அவரை, தி.நகர் சத்யாவும் விருகை ரவியும் தங்கள் கஸ்டடிக்குக் கொண்டுவந்துட்டாங்க. அவரை இப்ப சகல விதத்திலும் வேண்டியதை செய்து குஷி படுத்தியிருக்கு இந்த டீம் என்று அரசியல் வட்டாரங்கள் கூறிவருகின்றனர். இந்த விஷயத்தை அறிந்த தினகரன் மற்றும் அமமுக கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.