தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சென்றுள்ளார். எடப்பாடி வெளிநாடு செல்லும் போது முதல்வர் பொறுப்பை யார்கிட்டயும் கொடுக்காமல் சென்றது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. அதிமுகவில் எடப்பாடி இல்லாத நேரத்தில் ஓபிஎஸ்ஸிடம் பதவி கொடுக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் பொறுப்பு முதல்வர் பதவி கொடுக்கப்படவில்லை. இதனால் ஓபிஎஸ் தரப்பு கடும் அதிருப்தியில் இருந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் கட்சியையும், ஆட்சியையும் எடப்பாடி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்ட வர திட்டம் போட்டுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.

Advertisment

eps

இதனால் கட்சி பொதுக்குழு மற்றும் உள்ளாட்சி தேர்தல் வருவதற்குள் கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரையும் தன் பக்கம் கொண்டு வரும் நடவடிக்கையில் எடப்பாடி தீவிரமாக இறங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் தேர்தல் வருவதற்கு முன்பாக அனைத்தையும் சரி செய்யும் பணிகளை எடப்பாடி முடித்து விட்டார் என்று கூறுகின்றனர். அதோடு, உள்ளாட்சி தேர்தலில் நகராட்சி தலைவர், ஊராட்சி தலைவர், மாநகராட்சி மேயர், கவுன்சிலர் பதவிகளை தனது ஆதரவாளர்களுக்கு கொடுத்து தன் பக்கம் இழுக்கும் வேலையை சிறப்பாக செய்து கட்சியையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறாராம் எடப்பாடி. இதனால் கட்சியில் பெருவாரியான நிர்வாகிகள் ஏற்ப்பாடு தரப்புக்கு ஆதரவான மனநிலையில் இருக்கின்றனர். எடப்பாடியின் இந்த நடவடிக்கையால் பெரும் அதிர்ச்சியில் ஓபிஎஸ் தரப்பு இருப்பதாகவும், முன்பு இருந்ததை விட ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவு கொஞ்சம் குறைந்துள்ளதாகவும் சொல்கின்றனர். ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பெரும்பாலானோர் அவர் மீது அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.