Skip to main content

மோடியின் அடிமைகள் இவர்கள்... –EVKS இளங்கோவன்

Published on 18/02/2020 | Edited on 18/02/2020

 

தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பாக இன்று ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து ஆர்பாட்டங்கள் நடைபெற்றது. ஈரோட்டில்  சூரம்பட்டி நால் ரோடு என்ற பகுதியில் நடந்த  ஆர்ப்பாட்டத்தை முன்னாள் தமிழக தலைவர் EVKS இளங்கோவன் தொடங்கிவைத்து பேசினார். 

 

E. V. K. S. Elangovan



 

அப்போது அவர், மோடி இஸ்லாமிய மக்களுக்கு தொந்தரவு தர வேண்டும், அவர்களை தனிமை படுத்தி ஒதுக்க வேண்டும் என்று திட்டமிட்டே குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்துள்ளார். இந்தியாவில்  ஒற்றுமையாக இருக்கும் மக்களை மதத்தால் பிரிக்க வேண்டும் என மோடி திட்டமிட்டே செயல்படுகிறார்.  


குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பல மாநிலங்களில் உள்ள சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்துள்ளனர். ஆனால் தமிழக ஆட்சியாளர்கள் அடிமைகளாக இருக்கிறார்கள். 
 

இவர்கள் எப்போதுமே அடிமைகள் தான் முன்பு ஜெயலலிதாவுக்கு அடிமையாக இருந்தார்கள், இப்போது மோடிக்கு அடிமைகளாக இருக்கிறார்கள். மோடியை பகைத்துக் கொள்ள முடியாத இந்த அடிமைகள் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவர முடியாது எனக்கூறிவிட்டனர்.
 

 பிரிட்டிஷ்காரர்களையே விரட்டி, விரட்டி அடித்தவர்கள் நமது  மக்கள். மோடி அரசையும் விரட்டி அடித்து  தூக்கியெறிவார்கள்.  ஆயிரக்கணக்கான தலைவர்களும், தொண்டர்களும்  உயிர் தியாகம் செய்து நாட்டிற்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்தனர். ஆனால் இப்போது தனி மனிதனின் சுதந்திரமே பறிபோய்கொண்டிருக்கிறது.


மத்திய அரசு பொருளாதாரத்திலும் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. படித்தவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை, வணிக நிறுவனங்கள் மூடப்படுவதால் வேலையிழப்பு அதிகமாகிறது. தொழில், வியாபாரம், விவசாயம் ஆகியவை மிக மோசமான நிலையில் போய் கொண்டிருக்கிறது.


 

 கடுமையான நெருக்கடியில் இருக்கும் மக்கள் மீது கூடுதல் சுமையாக சமையல் எரிவாயு விலை உயர்வு உள்ளது. காங்கிரஸ் ஆட்சி காலத்தை ஒப்பிடுகையில் இப்போது இரண்டு மடங்கு விலை அதிகரித்துள்ளது.  மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் மோடி அரசுக்கு கடுகளவும் இல்லை. ஹிட்லர், முசோலினி போன்று மோடி செயல்படுகிறார். அந்த சர்வாதிகாரிகளுக்கு ஏற்பட்ட நிலைதான் மோடிக்கும் ஏற்படும்.
 

இந்த நிலை தொடருமானால் தமிழகத்துக்குள் மோடி கால் வைக்க முடியாத நிலைதான்  உருவாகும். நமது இளைஞர்கள் உணர்ச்சி மிக்கவர்கள்,  தன்னெழுச்சியாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தை யாரும் மறந்துவிடாதீர்கள். நாடு மோசமான நிலையில் போய்க்கொண்டிருக்கிறது. இதை தடுத்து நிறுத்தியாக வேண்டும். எந்த தியாகத்தையும்  செய்ய காங்கிரஸ் கட்சியினர் தயாராக இருக்க வேண்டும். என்றார்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இறந்து கிடந்த ஆண் யானை; வனத்துறையினர் விசாரணை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Forest department investigation


                                கோப்புப்படம் 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் பத்து வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் விவசாய தோட்டத்தில் புகுவதும்,  உணவுக்காக சாலையில் உலா வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கும்டாபுரம் அருகே ஆண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை கண்டனர். இதுபற்றி தாளவாடி வனச்சரக அலுவலர் சதீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையில் மருத்துவக் குழுவினர் இறந்த யானையின் உடலை அங்கேயே பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதில் இறந்த யானைக்கு சுமார் 18 வயது இருக்கும் எனத் தெரிவித்தனர். ஆண் யானையின் தந்தங்கள் இல்லாததால் யானை சுட்டுக் கொல்லப்பட்டதா? அல்லது விஷம் வைத்து கொல்லபட்டதா?  அல்லது இறந்த கிடந்த யானையின் தந்தங்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றார்களா? என வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பிரேதப் பரிசோதனை மாதிரிகளையும் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த யானை உடலை மற்ற வனவிலங்குகளுக்காக வனப்பகுதியில் விட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.