Skip to main content

மகனை ஆதரித்து பிரச்சாரம் செய்த துர்கா ஸ்டாலின்..! (படங்கள்)

Published on 31/03/2021 | Edited on 31/03/2021

 

சட்டமன்றத் தேர்தலுக்காக தொடர் பிரச்சாரம் செய்து வரும் துர்கா ஸ்டாலின், திமுக தலைவர் ஸ்டாலினை ஆதரித்து கொளத்தூர் தொகுதியில் பிரச்சாரம் செய்து வந்தார். அதேபோல் தற்போது, தனது மகனும் சென்னை திருவல்லிக்கேணி - சேப்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளருமான உதயநிதி ஸ்டாலினை ஆதரித்து துர்கா ஸ்டாலின் அயோத்தியா குப்பத்தில் மீனவப் பெண்களிடம் வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரஜினி வீட்டு நவராத்திரி விழாவில் அரசியல் தலைவர்கள்

Published on 25/10/2023 | Edited on 25/10/2023

 

 

 

இந்தியாவில் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வரும் நவராத்திரி விழா, இந்தாண்டும் மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் வீட்டிலும் பிரம்மாண்டமாக நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. லதா ரஜினிகாந்த் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர், நடிகை மீனா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

 

 

Next Story

“அன்று உங்க பாட்டிக்காக சாப்பிட்டேன்..” - துரை வைகோவிடம் துர்கா ஸ்டாலின் சொன்ன ஃபிளாஷ்பேக்

Published on 03/05/2022 | Edited on 03/05/2022

 

Durga Stalin and Durai Vaiko met

 

திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் சமீபத்தில் திருவெண்காடு கிராமத்தில் உள்ள தனது சொந்த வீட்டிற்கு சென்றிருந்தார். அதே நேரம், ம.தி.மு.க.வின் தேர்தல் பணிச் செயலாளர் செந்தில் செல்வனின் தாயார் படத்திறப்பு விழாவுக்காக துரை வைகோ மயிலாடுதுறை சென்றிருந்தார். 


திருவெண்காட்டுக்கு துர்கா ஸ்டாலின் வந்திருப்பதை அறிந்து துரை வைகோ, அவரை சந்திப்பதற்காக திருவெண்காடு சென்றார். அவரை முகமலர்ச்சியுடன் வரவேற்ற துர்கா ஸ்டாலின், வைகோவின் உடல்நலம் குறித்து கனிவாக விசாரித்திருக்கிறார். அப்போது துரை வைகோ, “எங்கள் கலிங்கப்பட்டி வீட்டுக்கு நீங்கள் வரவேண்டும்” என்று துர்கா ஸ்டாலினை அழைத்துள்ளார். 


அதற்கு துர்கா ஸ்டாலின், “நான் ஒருமுறை உங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறேன். உங்கள் பாட்டிம்மா செய்யும் அசைவ உணவுகள் அவ்வளவு ருசியாக இருக்கும். சனிக்கிழமைகளில் அசைவ உணவுகளைச் சாப்பிடாத நானே, அன்று பாட்டிம்மாவுக்காக சாப்பிட்டேன்” என்று பழைய நினைவைப் பகிர்ந்திருக்கிறார்.