Duraiswamy has said that the DMK will be merged with the DMK

Advertisment

மதிமுக அவைத்தலைவர் துரைசாமி கட்சியின் பொதுச்செயலாளர் வைகோவிற்கு எழுதியுள்ளகடிதம் கட்சி வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்தக் கடிதத்தில், “தங்களின் சமீபகால நடவடிக்கைகளால்கட்சிக்கும்தங்களுக்கும்மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. சந்தர்ப்பவாத சுயநல அரசியலுக்குதாங்களும் அப்பாற்பட்டவர் இல்லை என்பதைகட்சியினர் அறிந்துள்ளனர். கடந்த 30 ஆண்டுகளாகஉங்கள் உணர்ச்சிமிக்க பேச்சை நம்பிவாழ்க்கையை இழந்த கட்சியினர்மேலும் மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்ககட்சியைதாய்க்கட்சியான தி.மு.க.வில் இணைத்து விடுவது சமகால அரசியலுக்கு சாலச்சிறந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், இது குறித்து அவைத்தலைவர் துரைசாமிகட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், கடிதத்திற்கு வைகோவின் பதிலுக்காக காத்திருப்பதாகவும் துரைசாமி தெரிவித்திருக்கிறார்.