தேனி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் ஒற்றை ஆளாய் வெற்றி பெற்றவர் துணைமுதல்வர் பன்னீரின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத். அதேபோல் வேலூர் தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்றவர் கதிர் ஆனந்த். எதிரும் புதிருமாக ஓ.பி.ரவீந்திர நாத்தும்- கதிர் ஆனந்தும் மக்களவையில் செயல்பட்டு வருகிறார்கள். அதே வேளையில் தமிழக அரசியல் களத்தில் துரைமுருகனும் - ஓ.பன்னீர்செல்வமும் கடுமையாக மோதிக் கொள்பவர்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/rrrrrtttttttttttt.jpg)
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இந்நிலையில், துரைமுருகனும், ரவீந்திரநாத்தும் சந்தித்து பேசிய அதிசயம் நடந்தேறி இருக்கிறது. தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுக் கணக்குக் கூழு கூட்டத்திற்கு வருகை புரிந்த குழுவின் தலைவர் துரைமுருகன், அதிமுக மக்களவைத் தலைவர் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டத்தில் கலந்துகொண்ட துரைமுருகனுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார் ரவீந்திரநாத். இந்தக் கூட்டத்தின் போது தேனி மாவட்ட ஆட்சி தலைவரோடு, டி.ஆர்.பாலு மகனும் சட்டமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பி.ராஜா பங்கேற்றாலும், ஓ,பி.எஸ் மகனுடன் துரைமுருகன் ஆர்வமாக வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)