Advertisment

துரைமுருகன், டி.ஆர்.பாலுவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

fdddd

துரைமுருகன் மற்றும் டி.ஆர்.பாலுவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisment

தி.மு.க.வின் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளை நிரப்புவதற்காக கட்சியின் பொதுக்குழு வருகிற 9 ஆம் தேதி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூடுகிறது. பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் வேட்புமனுதாக்கல் செய்தார். இருவரும் போட்டியின்றி தேர்வு செய்ய இருக்கிறார்கள். இந்நிலையில், இவர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisment

ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில், ''தி.மு.க.வின் பொதுச்செயலாளராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு துரைமுருகன் அவர்களுக்கும், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய நண்பர் திரு டி.ஆர். பாலு அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

rajinikanth T.R.Baalu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe