மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மகன் துரை வையாபுரி என்கிற துரை வைகோ அவர்களுக்கு மதிமுகவில் ஒரு அரசியல் பதவி தர வேண்டும் என மதிமுகவில் ராஜபாளையம் ஒன்றியக்குழுத் தலைவர் ப.வேல்முருகன் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினார்.

Advertisment

durai-vaiyapuri

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த தீர்மானத்தை ஆதரித்து மதிமுகவின் துணைப் பொதுச்செயலாளரான மல்லை சத்யா, விருதுநகர் மாவட்டத்தில் ஒரு கூட்டத்தில் துரை வைகோவுக்கு அரசியலில் பதவி தர வேண்டும் என்று இங்கே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனை நான் வழிமொழிகிறேன். அவருக்கு வேண்டுமென்றால் நானே எனது பதவியை ராஜினாமா செய்து விடுகிறேன் என்று சொன்னார்.

vaiko

Advertisment

அதற்கு பிறகு துரை வைகோவுக்கு பதவி தர வேண்டும் என்கிற கோரிக்கை மதிமுகவில் வேகம் பெற்றுள்ளது. ஒன்றிய கழகம் முதலில் நிறைவேற்றிய இந்த தீர்மானம், மாவட்டக் கழகங்களில் தீர்மானமாக மாறியுள்ளது.

சமீபத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட மதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் இந்திய நாட்டின் அரசியல் வரலாற்றில் தியாக தழும்புகளை ஏற்று மிசா, தடா போன்ற அடக்குமுறை சட்டங்களை சந்தித்து குடும்ப சுகபோகங்களை மறந்து தமிழினம், தமிழ் மொழிக்காக அல்லும் பகலும் உழைத்து வரும் திராவிட இயக்கத்து போர் வாள் வைகோ அவர்களின் புதல்வர் திரு. துரை வைகோ அவர்களை உரிய இடத்தில் வைத்து மதிமுகவில் பணியாற்றிட வாய்ப்பு அளிக்க வேண்டும் என தாயகம் ப.செல்வராஜ் உட்பட பலர் சேர்ந்து தீர்மானமாக நிறைவேற்றி அனுப்பி வைத்துள்ளனர்.

-உமர் முக்தார்