தனது மகனை லாரி ஏற்றி கொலை செய்ய சதி நடந்ததாக திமுக பொருளாளர் துரைமுருகன் பேசியதால் திமுகவினரிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மக்களவைத் தொகுதியில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். இதற்காக வேலூரில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடந்தது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/duraimurugan 71.jpg)
இதில் கலந்து கொண்டு பேசிய துரைமுருகன், தேர்தல் ஆதாயத்துக்காக, எங்கள் விட்டில் பணத்தை கொண்டு வந்து வைத்துவிட்டு வருமான வரித்துறையினரை அனுப்பியது யார்? என்னுடைய மகனை லாரி ஏற்றி கொலை செய்ய திட்டம் தீட்டியது யார்? அந்த துரோகி யார்? என எனக்கு தெரியும்.
எங்கள் வீட்டில் சோதனை நடத்த உத்தரவு பிறப்பித்த வருமான வரித்துறை அதிகாரி ஓய்வு பெற்ற பிறகும், அவரையே வேலூர் மக்களவை தேர்தலில் செலவு கணக்கை பார்க்க தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
நான் சொன்னதை செய்பவன். வேலூருக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். அதேபோல் என்னுடைய மகனும் என்னைப்போலவே கொடுக்கும் வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்றார்.
Follow Us