ADVERTISEMENT

'' துரை.வைகோ திணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது''-மதிமுகவிலிருந்து விலகிய வே.ஈஸ்வரன் பேட்டி!

11:51 AM Oct 21, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க.வின் தலைமை அலுவலகமான தாயகத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. தலைமையில் கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டம் நேற்று (20/10/2021) நடைபெற்றது. கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கட்சியில் துரை வையாபுரிக்குப் பொறுப்பு வழங்குவது, கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கட்சியின் மாவட்டச் செயலாளர்களிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி., "ம.தி.மு.க.வின் தலைமைக் கழக செயலாளராகத் துரை வையாபுரி நியமிக்கப்பட்டுள்ளார். 106 வாக்குகளில் துரை வையாபுரிக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என 104 வாக்குகள் கிடைத்துள்ளன. துரை வையாபுரி நியமனத்தில் வாரிசு அரசியல் இல்லை. தொண்டர்கள் விருப்பப்படி துரை வையாபுரி ம.தி.மு.க. தலைமைக் கழக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்''எனக் கூறினார்.

ம.தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளராகத் துரை வையாபுரி பொறுப்பேற்ற நிலையில் மதிமுகவிலிருந்து அக்கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளர் வே.ஈஸ்வரன் பதவி விலகியுள்ளார். மேலும் ''எது நடக்கக்கூடாது என்று நினைத்தேனோ அது நடந்துவிட்டது'' என அவர் கருத்து தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக கோவையில் பேட்டியளித்துள்ள வே.ஈஸ்வரன், ''மதிமுகவில் வாரிசு அரசியல் இல்லாத நிலையில் அதனைத் திணிக்க வேண்டிய அவசியம் என்ன? துரை வைகோதான் மதிமுவை வழிநடத்த முடியும் எனக்கூறுவது ஏன்? காலம்தான் தலைவர்களை உருவாக்கியுள்ளது. ஆனால் மதிமுகவில் இந்த திணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது'' எனத் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT